எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு உரையாற்றிய ரிசாத் பதியூதின் தன்னுடன் சேர்த்து மாகாண சபை
உறுப்பினர்கள் 7 பேர், பிரதேச சபை உறுப்பினர்கள் 69 பேர் எதிர்கட்சியில்
இணைந்து கொண்டதாக தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் அண்மையில் அஸ்வர் பதவி நீங்க அந்த வெற்றிடத்திற்கு
நியமிக்கப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் கலந்து
கொண்டிருந்தார்.
இங்கு உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாட்களில்
அரசாங்கத்தின் பிரபல கட்சியொன்று தனக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்காதவாறு தனது வேலைத் திட்டங்களை
முன்னெடுக்கவுள்ளதாகவும் தன் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி
தெரிவிப்பதாகவும் மைத்திரிபால சிறினேச குறிப்பிட்டார்.
Post a Comment