பொலனறுவையில் மூக்குடைபட்ட பொதுபலசேனா
Thursday, January 1, 20150 comments
100 பேர் அடங்கிய பொது பல குழுவினர் பொலன்னறுவ கதுறுவலயில் நேற்றுமுன்தினம் நண்பகல் பேரணி நடத்த முற்பட்டனர்.
இதனால் உடனடியாக அனைத்து முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு உசார் நிலையில் இருந்தனர்.
எனினும் அங்கு திரண்ட பெளத்த மத சகோதரர்களும் கதுறுவெல விகாரையின் தலைமைப் பிக்குவும் இணைந்து எங்கள் ஊரைச் சேர்ந்த முஸ்லிம்கள் யாருக்கும் அநியாயம் நடக்க விட மாட்டோம் நீங்கள் இங்கு வரத் தேவையில்லை என தடுத்துள்ளனர்.
இதன் போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் பொது பலசேனா சார்பில் வந்த சிலருக்கு அடியும் விழுந்தது.
பின்னர் அங்கு வந்த பொலிசார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள கொண்டு வந்ததுடன் பேரணியை நடத்த விடாது தடுத்து வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.
Post a Comment