பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சர்வதேச சக்திகளுக்கு தேவையானவற்றை
செய்து கொண்டிருப்பதாகவும் தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கி செவ்வி மிகவும்
ஆபத்தானதெனவும் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
யுத்த குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளமை
அபாயமான விடயம் என்றும் விகாரமகாதேவி பூங்காவில் முதலில் வெளியிட்ட கொள்கை
விளக்கத்தில் அவ்வாறு எதுவும் இருக்கவில்லை என்றும் கொழும்பில் இன்று
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் பகிரங்கமாக உடன்படிக்கையில்
கைச்சாத்திட்டதோடு இரகசியமாகவும் உடன்படிக்கைகள்
கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து
கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதி தன்னிடம் உள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க
கூறினார்.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவிற்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கையில் உள்ள
சரத்துக்களில் நாட்டு தீங்கு ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.
உடன்படிக்கையின் 2,6,5 சரத்துக்கள்படி வடக்கில் இராணுவம் 50%
குறைக்கப்படும் என்றும் 2,7,1 சரத்துக்கள் மூலம் அனைத்து பாதுகாப்பு உயர்
வலயங்கள் அகற்றப்படும் என்றும் அந்த இடங்களை முன்னர் இருந்தவர்களுக்கு
வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க
சுட்டிக்காட்டியுள்ளார்.
2,7,2 சரத்துக்கள்படி தமிழர்களுக்கு 13ம் திருத்த சட்டத்திற்கு மேல் சென்று
தீர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க
தெரிவித்துள்ளார்.
Post a Comment