நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியாவில் நடைபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி ஏ.எச்.எம்.அஸ்வர் பேசும் போது கூட்டத்தில் கலந்து கொண்டோர் கூச்சலிட்டனர். அஸ்வர் தனது பேச்சில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் சம்பந்தமாக அடுக்கிக் கொண்டு போனார். இவ்வேளையிலேயே மக்கள் கூச்சலிட்டனர். இதனால் அவர் பேச்சை முடித்துக் கொண்டார்.
இதேவேளை ஜனாதிபதியும் இங்கு எதிர்பார்த்தளவு பேசவில்லை. சுமார் 15 நிமிடங்களுக்குள் தனது பேச்சை சுருக்கிக் கொண்டு வெளியேறி விட்டார். அவர் தனது பேச்சில் நான் இங்கு பேசுவதற்காக வரவில்லை. உங்களையெல்லாம் கண்டு சலாம் சொல்லிவிட்டு போகவே வந்தேன் என்று கூறினார்.
மைத்திரிக்கு ஆதரவாக அவரது சகோதரர் கலந்து கொண்ட கூட்டம் ஒரு வாரத்திற்கு முன்னர் இதே மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டோரை விட குறைந்தளவினரே ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எனினும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பஸ்களில் அழைத்து வரப்பட்டவர்களாவர்.
Post a Comment