தேர்தல் சட்டத்தை ஜனாதிபதி மீறுகிறார் - முஜிபுர் ரஹ்மான் முறைப்பாடு
Thursday, January 1, 20150 comments
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் சட்டங்களை மீறி செயற்படுவதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணையாளருக்கு நேற்று முன்தினம் (30)முறைப்பாடொன்றை கையளித்துள்ளார்.
கையளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு கடிதத்தில், 'இன்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நெலும் பொகுண மஹிந்த ராஜபக்ஷ நாடக அரங்கில் நடைபெறவுள்ள அகில இலங்கை அதான் ஓதல் போட்டியின் பரிசளிப்பு விழாவின் சிறப்பு அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த குறித்த நிகழ்வில் கலந்து கொள்வது தேர்தல் சட்டத்தை மீறும் செயற்பாடு என்ற காரணத்தினால் நீதியான தேர்தலொன்றினை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Articles
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment