மைத்திரிபால தலைமையில் அரசிலிருந்து வெளியேரும் 28 பேர்
Friday, November 21, 20140 comments
அரசாங்கத்திலிருந்து தொடர்ச்சியாக 28 ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகி வெளியில் வர இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தலைமைதாங்கி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளருமான மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தை விட்டு வெளியேற இருப்பதாக பலமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ராஜித சேனாரட்ன, ரட்ன ஸ்ரீ விக்ரமநாயக்க உள்ளிட்ட முக்கிய மூத்த அரசியல் தலைவர்களும் எதிரணியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தெரியவருகிறது.
அரசாங்கத்திலிருந்து சுதந்திர கட்சியின் குழுவொன்று வெளியேறவுள்ளது. பாரம்பரிய சிறீலங்கா சுதந்திரக் கட்சியைக் காப்பாற்றும் குழுவாக இந்த கிளர்ச்சிக் குழு விளங்க இருப்பதாகவும் இவர்களின் பிரதான ஆலோசகரா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா விளங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment