கண்டியில் இனவாதத்தை தூண்ட யாருக்கும் இடமளியோம் - லாபிர் ஹாஜியார்
Tuesday, June 24, 20140 comments
கண்டியில் மூவ்வின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்நிலையில் இங்கு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எந்த நடவடிக்கைகளையும் இங்கு வந்து யாராலும் செய்து விட முடியாது என மத்திய மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஜெய்னுலாப்தின் லாபிர் ஹாஜியார் நம்மவனுக்கு தெரிவித்தார்.
இன்று சில கும்பள் கூட்டம் நடத்த ஏற்படாடு செய்துள்ளதாக அறிந்துகொண்டேன். இவ்விடயம் தொடர்பில் தான் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கலந்துரையாடியதாகவும் லாபிர் ஹாஜியார் தெரிவித்தார்.
எனினும் இங்கு எவ்விதமான அசம்பாவிதங்களும இடம்பெறுவதற் இடமளிக்கப்போவதில்லை. அப்படி யாராலும் இங்கு வந்து தமது சித்துவிளையாட்டுக்களை காட்ட முனைந்தால் அவர்களை இங்குள்ள முஸ்லிம், தமிழ், சிங்கள அரசியல் வாதிகளே விரட்டியடிப்பார்கள் எனவும் அவர் எச்சரிக்கைவிடுத்தார்.
கண்டி மாவட்டத்தில் நாம் சிங்களவர்களின் பெரஹரா உள்ளிட்ட எல்லா மத நிகழ்வுகளிலும் பங்குகொள்கிறோம். இங்கு சிறந்த மத இணக்கம் காணப்படுகின்றது. அதை கட்டி காப்பதற்கு நாம் ஒற்றுமையாக செயற்படவேண்டும் எனவும் லாபிர் ஹாஜியார் மேலும் தெரிவித்தார்.
Post a Comment