ரிசாத் உள்ளே; ஹகீம் வெளியே?
Sunday, December 21, 20140 comments
இரு முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலும் யார் அரசோடு ஒட்டிக்கொள்வது என்பதில் நிலவிய பனிப்போர் ஏறத்தாழ முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் தருணம் நெருங்கி விட்டதாக அரசியல் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனான பேரம் பேசலை விட அ.இ.ம.க வுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து வந்ததாகவும் எனினும், அரசாங்கம் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு வரும் வரை தமது பேரங்களுக்கும் பதில் கிடைக்கலாம் எனும் நம்பிக்கையில் மு.கா காத்திருந்த நிலையிலும் தற்போது அ.இ.ம.கவுக்கு முன்னுரிமை வழங்கி அக்கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் முன் வந்திக்கும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறும் காலம் நெருங்கி விட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கேற்ப அரச ஊடகங்களில் அ.இ.ம.க கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இன்றைய தினம் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மக்கள் விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு அறிவிக்கப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவை நேற்று முதல் இது குறித்த ஊகங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment