ஷெஸாட் டில்சானை இஸ்லாத்துக்கு அழைத்தமைக்கு இந்திய பா. ஜ.க. கண்டனம்!
Friday, September 5, 20140 comments
பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் அஹ்மட் ஷெஸாட், இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷானுக்கு கூறிய மதரீதியான உபதேசத்தை பாரதீய ஜனதாக் கட்சி கண்டித்துள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நவ்வி இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கைக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பின்னர் வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறிய போது பாகிஸ்தானிய வீரர் தில்ஷானிடம் முஸ்லிமாக மாறுமாறு உபதேசம் செய்தார்.
இந்த விடயம் குறித்த பாகிஸ்தானிய கிரிக்கெட் சபை கடந்த புதன்கிழமையன்று பாகிஸ்தானிய வீரரிடம் விளக்கம் கோரியது.
இந்தநிலையில் இவ்வாறான செயல்கள் இஸ்லாத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் முக்தார் அப்பாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment