இரத்தினபுரி, எஹலியகொடயில் இடம் பெற்ற ஐ.ம.சு.கூ இன் கூட்டம் ஒன்றில் ஐ.தே.க சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினர் சிரிப்பால கிரியெல்லவும் அவரது ஆரதரவராளர்களும் அத்துமீறி நுழைந்து பிரச்சினை ஏற்படுத்தியுள்ளதாக கெபே அமைப்பு தெரிவிக்கின்றது.
இந்த இரு குழுக்களுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பில் மாகாணசபை உறுப்பினர் சிரிப்பால கிரியெல்ல கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதுடன்,
இதன் போது காயத்துக்குள்ளான மேலும் நான்கு பெண்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.
இதன் போது காயத்துக்குள்ளான மேலும் நான்கு பெண்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.
பொல்லுகள், மற்றும் துப்பாக்கிகளுடன் வந்த குழுவினரே இவ்வாறு தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இடத்தில் இடம் பெற்ற கூட்டம் சட்டவிரோதமான ஒரு கூட்டம் என தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடொன்றும் செய்யப்பட்டிருந்தது.
இந்தப்பிரச்சினை இடம் பெறும் போது அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அந்த இடத்துக்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதேவேளை இந்த நிகழ்வுக்கு அமைச்சர் வாசுதேவநானேயக்காரவும் வருகைதர இருந்துள்ளார்.

Post a Comment