வரலாற்றுக் கதைகளை மையப்படுத்திப் பார்க்கும் போது சிங்கள இனத்தின்
ஆரம்பம் விஜயனில் இருந்து தோற்றம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
விஜயனும் அவரது குழுவும் இலங்கைக்கு வரும் போது இலங்கையில் பல
குழுக்களும் (கோத்திரங்கள்) காணப்பட்டுள்ளன. அதே போல் பல குழுக்கள்
விஜயனின் வருகைக்கு பின்னரும் நாட்டுக்கு வந்துள்ளன. ஆனாலும் விஜயனை
பிரதிநிதித்துவப்படுத்திய கோத்திரமே மிக முக்கியமான கோத்திரமாக
விளங்கியுள்ளது.
இலங்கையில் காணப்பட்ட ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் தனியான தலைவர்களும்
நிலப்பரப்பெல்லைகளும் காணப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு கோத்திரங்களுக்கும்
மத்தியில் நம்பிக்கைசார், பண்பாடு சார் வித்தியாசங்களை அவதானிக்க
முடிந்தது. அதே போல் அவர்களின் மொழியிலும் வித்தியாசமான தன்மைகள்
காணப்பட்டது.
கோத்திரங்களில் மக்கள் தொகை அதிகரிக்க மேலாண்மைப் போட்டி ஏற்பட்டு
கோத்திரங்களுக்கிடையில் யுத்தம் ஏற்பட்டது. விஜயனின் கோத்திரம்
அதிகாரமிக்கதாக மாறிய போதிலும் கூட ஏனைய அனைத்து கோத்திரங்களையும்
இணைத்து சிங்கள சமூகத்தை கட்டியெழுப்பிய பெருமை பௌத்த மதத்தையே சாரும்.
பௌத்த மதத்தின் வருகைக்குப் பின்னரே இலங்கையில் சிங்கள இனம் பிரதான இனமாக
பரிணமித்ததை இதிலிருந்து எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
சிங்கள சமூகத்தை ஒன்றிணைக்கும் வேலையை செய்த பௌத்த மதத்தின் இந்த வரலாறே
சிங்களவர்களின் மதமாக பௌத்த மதத்தை மாற்றியது.
பௌத்த மதத்தின் வருகை
முட்டசீவவின் இரண்டாவது மகன் திஸ்ஸ மன்னன் அரசாட்சிக்கு வந்த பின்னர்
அசோக இராஜ்யத்துக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாக வரலாற்றுக் கதைகள்
சான்று பகர்கின்றன.
அந்த தூதுக் குழுவை வரவேற்று அவர்களிடம் அசோக மன்னனிடம் இருந்து பௌத்த
மதத் தின் செய்தி திஸ்ஸ மன்னனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த
செய்திக்கமைய திஸ்ஸ மன்னன் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டான் .
சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்துக்கமைய திஸ்ஸ ஆட்சிக்கு வரும் போது
காமினி என்ற பதவியிலேயே இருந்தார். அதாவது அவர் கோத்திர தலைவராகவே
இருந்ததாகவும் அவரைப் போல பல கோத்திர தலைவர்கள் நாட்டில்
காணப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
அசோக மன்னனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக தனக்கான தனி
அடையாளத்தையும், அதிகாரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும், அரச
அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கில் தூதுக் குழுவை அசோக
இராஜ்யத்துக்கு அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏனைய காமினிமார்களி டமும் மக்களிடமும் திஸ்ஸ மன்னன்
தன்னை அதிகாரமிக்க அசோக இராஜ்யத்தின் தேசிய பிரதிநிதி என
அடையாளப்படுத்தினார் .
தொடரும்....
பௌத்த மதத்தின் வருகை : தொடர் (3)
Thursday, December 18, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment