ஊவா தேர்தலே ஜனாதிபதி தேர்தலுக்கு வழி செய்தது – ஹப்புத்தளையில் ரணில்
Sunday, December 21, 20140 comments
ஊவா மாகாண சபையின் தேர்தல் முடிவுகள், ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கத்தை இட்டுச் சென்றதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ஊவா மாகாண சபைத் தேர்தல் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தை தள்ளியது. ஊவா தேர்தலில் இலகுவாக வெற்றிபெற்றுவிடலாம் என்று ஜனாதிபதி கருதி இருந்தார். ஆனால் தேர்தல்பெறுபேறு அவ்வாறு அமையவில்லை.
இதனை அடுத்து உடனடியாக ஜனதிபதி தேர்தலை நடத்துமாறும், இரண்டு வருடங்களுக்கு பின்னர் தேர்தல் நடத்தினால் வெற்றி பெற முடியாது என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அறிவுறுத்தினார்.
இதனை அடுத்தே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டமை, அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இதனிடையயே ஹப்புத்தலை ஐ.தே.க. கூட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரணிவிக்கிரம சிங்க அங் வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஹப்புத்தளையில் ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய கூட்டத்துக்கு சென்ற ஆதரவாளர்கள் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும் இத்தாக்குதலின் போது, வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
கூட்டத்துக்காக கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளுக்கான வயர்களை வெட்டியவர்கள் மீது ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் கல்லெறிந்துள்ளனர். இதனையடுத்தே அத்தரப்பினரும் ஐ.தே.க ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வயர்களை வெட்டியவர்களும் தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களும் ஊவா மாகாண முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என்று ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஹரின் பெர்ணான்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
Post a Comment