முஸ்லிம் நாடுகளே என்னை காப்பாற்றுகின்றன!- கல்முனையில் மஹிந்த

Sunday, December 21, 20140 comments


வசதி படைத்த முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ் கடமையை நிறைவு செய்கின்றனர். வறிய மக்களுக்கு அந்த வாய்ப்பு ஒரு தடவை கூட இல்லாமல் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆகவே இனி வரும் காலங்களில் ஹஜ் கடமைக்குரிய காலத்தை விடவும் மேலதிகமாக கடமை நிறைவேற்ற செல்கின்ற தனவந்தர்கள், ஏழைகள் இரண்டொருவரை ஹஜ் கடமைக்கு கூட்டி செல்ல முன் வரவேண்டும் என கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று காலை கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான பெஷ்டர் றியாஸ் தலைமையில் கல்முனை கடற்கரைப் பள்ளி முன்பாக நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

அந்த இருண்ட 30 வருட கால யுத்தத்தை என்னால் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்ல முடியாதிருந்த அந்த யுகத்தை மாற்றி இன்று நீங்கள் எல்லோரும் சுதந்திரமாக பள்ளிக்கு செல்கின்றீர்கள். அன்று பள்ளிக்கு செல்ல நின்மதியில்லை இபாடசாலைக்கு பிள்ளைகள் செல்ல முடியாது அந்த இருண்ட யுகத்தை முறியடித்து. உங்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களை சுட்டுக் கொலை செய்ததை ஒரு நாளும் மறக்க முடியாது. அந்த இருண்ட யுகத்தை நீக்கி சுதந்திரம், நின்மதியைப் பெற்று தந்தேன்.

கடந்த காலத்தில் இந்த பிரதேசத்துக்கு பாரிய அபிவிருத்திக்கு பெருந் தொகை நிதி  ஒதுக்கீடு செய்தேன். ஏழை மக்களுக்கு பல வழிகளிலும் நான் உதவி வழங்கினேன். வரவு செலவு திட்டத்திலிருந்து கற்பத்திலிருக்கும் பிள்ளை முதல் கபுறரை சென்றோர் வரை ஏதோ வகையில் உதவி செய்துள்ளேன். 65 வயது வயோதிபருக்கும், வலது குறைந்தோருக்கும் பாரிய திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.

இந்த பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் அரசுடன் இணைந்திருந்த காரணத்தினால் 480 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கி அபிவிருத்திகள் பல செய்யப்பட்டன. எந்த ஆதரவினையும் எதிர்பார்க்காமலே மக்களுக்காக பெருந்தொகை நிதியை ஒதுக்கினேன். ஆனால் பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன .

இன வாதம்இமத வாதம் பேசி நாட்டில் குழப்பம் விளைவிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இதனை மக்கள் நம்ப வேண்டாம். மக்களுக்கு சுதந்திரம் அமைதியைப் பெற்றுக் கொடுத்ததற்காக என்னை ஜெனிவாவுக்கு கொண்டு போக சதி செய்கின்றனர். ஆனாலும் எனது நீதி நியாயமான நடவடிக்கைக்காக இஸ்லாமிய நேச நாடுகளே எனக்கு ஆதரவாக வாய் திறந்து குரல் எழுப்பியதை என்னால் மறக்க முடியாது. எனவே அனைவரும் பாதுகாப்பான சூழலில் வாழ எல்லோரும் ஒன்று படுவோம் என அவர் அங்கு தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் இன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இப்பிராச்சார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு பிரதான உரையினை நிகழ்த்தினார்.

இப்பிராச்சார கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.ரஹ்மான், கல்முனை முகைதீன் ஜம்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உள்ளிட்ட பெருந்திராள மக்களும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா கடற்கரைப் பள்ளியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளிலும், துஆப் பிரார்த்தனையிலும் கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளிலும் பாண்டிருப்பு துரௌபதையம்மன் ஆலயத்தற்கும், கல்முனை விகாரைக்கும் விஜயம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham