பொதுபலசேனாவின் கூட்டில் உருவாகும் அரசியல்கட்சிக்கு கம்மன்பில தலைவர்
Thursday, December 18, 20140 comments
திய சிங்கள பௌத்த அரசியல் கட்சியை உருவாக்க ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப்பொது செயலாளர் உதய கம்மன்பில முன்வைத்த யோசனையை பொதுபலசேனா ஆதரித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவை செயலிழக்க செய்யும் வகையில் இந்த கட்சி உருவாக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்த கட்சி உருவாக்கம் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பிரசாரங்களுக்கு ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தமது கட்சியின் தேசியநிலை உறுப்பினர்கள் எவரும் கம்மன்பிலவுடன் இணையமாட்டர்கள் என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
இதற்கிடையில் பொதுபலசேனாவுடன் இணைந்து அரசியல் கட்சியை கம்மன்பில உருவாக்கினால் அவரே அதன் தலைவராக செயற்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment