'அரசாங்க ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்'

Thursday, December 18, 20140 comments


அரசாங்க ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு பக்கச் சார்பாக செயற்படுவதனை அரச ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென கட்சி கோரியுள்ளது.

இவ்வாறு அரசாங்கத்திற்கு சார்பான வகையில் மட்டும் செயற்படும் தரப்பினருக்கு எதிராக ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

எனினும், அரசாங்க ஊடகங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரச்சாரப் பணிகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருவாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அனுராதபுரத்தில் நடைபெற்ற போது அந்த நிகழ்வு நேரடியாக அரச ஊடகங்களில் ஒளிபரப்புச்செய்யப்பட்டதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham