மஹிந்தவை இனிமேலும் நம்ப முடியாது - முசலியில் முஜிபுர் ரஹ்மான்

Thursday, December 18, 20140 comments


இரண்டு தவணை காலத்தில் வடக்கில் முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்­றாத ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மூன்­றா­வது தவணை காலத்தில் அதனை செய்வார் என நம்ப முடி­யாது என மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸி­லி­ருந்து விலகி ஐக்­கிய தேசிய கட்­சியில் இணைந்­து­கொண்ட வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாறூக்கை வர­வேற்கும் நிகழ்வு நேற்று முன்­தினம் முச­லியில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே முஜிபுர் ரஹ்மான் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில், மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு இன்னும் இரண்டு வரு­டங்கள் இருக்­கின்ற நிலையில், அவ­ச­ரப்­பட்டு ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு அழைப்பை விட்­டுள்ளார். இரண்டு வரு­டங்­களின் பின்னர் அவரின் செல்­வாக்கு வீழ்ச்­சி­ய­டையும் என்­பதை அவர் உறு­தி­யாக நம்பி இப்­போது தேர்­தலை நடத்­து­கிறார்.

2005 ஆண்டு ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வ­ளித்த மக்கள் விடு­தலை முன்­னணி 2010 ஆம் ஆண்டு தேர்­த­லின்­போது அவ­ருக்கு எதி­ராக செயற்­பட்­டது. 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யுடன் இருந்த ஜாதிக ஹெல உறு­ம­யவும் இன்று வெளி­யே­றி­யி­ருக்­கி­றது. ஆட்­சி­யா­ளர்­களின் மோசடி கார­ண­மா­கவே இன்னும் பலர் வெளியேறி எதி­ர­ணி­யுடன் இணைந்து நாட்டின் நல்­லாட்­சிக்­காக பாடு­ப­டு­கின்­றனர்.

இந்த அர­சாங்­கத்தின் கீழ் மன்னார் மாவட்ட முஸ்­லிம்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் அம்­மக்கள் மீள்­கு­டி­யேற முடி­யாமல் முகாம்­க­ளுக்குள் முடங்கி கிடக்­கின்­றனர். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­மாயின் மன்­னாரில் மீள்­கு­டி­யேற்­றங்­களை திட்­ட­மிட்டு மேற்கொள்ள முடியும். எனவே மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்து ஆட்சி மாற்றத்துடன் மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham