பல உறுப்பினர்கள் தம்பக்கம் இணைய உள்ளனர் - மைத்திரி

Monday, December 1, 20140 comments


எதிர்வரும் நாட்களில் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பலரும் தம்முடன் இணைந்து கொள்ள உள்ளதாக எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பலர் பங்கு கொண்டிருந்தனர்.

இதனை தவிர, ஜாதிக ஹெல உறுமையவின் சார்பில் அத்துரலிய ரத்தண தேரர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்த உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham