விலைபோகும் அமைச்சர்கள் இனி இல்லை - ஜனாதிபதி
Monday, December 1, 20140 comments
டொலருக்கும் பவுணுக்கும் விலைபோகும் அமைச்சர்கள் இனி தம்பக்கம் இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பணத்திற்கும் ஒவ்வொருவருடைய அரசியல் இலாபத்திற்காகவும் அடிப்பணியாத சக்திமிகு அமைச்சரவையுடன் நாட்டின் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல தாயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டை அபிவிருத்தி செய்ய தற்போதுள்ள அரசாங்கத்திற்கு மாத்திரமே முடியும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment