கிழக்கு மாகாண சபையும் ஒத்திவைக்கப்படலாம்?

Tuesday, December 2, 20140 comments


கிழக்கு மாகாண சபையில் இன்று வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் அச்சபை ஒத்திவைக்கப்படலாம் என தெரிய வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியினர் தபை தலைவரை ஆசனத்திலிருந்து இறங்க விடாததையடுத்து நேற்றைய தினம் ஆளும் எதிர் கட்சிகளுக்கிடையில் சபையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் இன்றுவரை ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்றைய அமர்வின்போது ஆளும் கட்சி வரிசையில் எட்டுபேரும் எதிரணியில் 13 பேரும் இருந்தனர்.

இந்நிலையில் தலைமையின் அவசர அழைப்பின்பேரில் முஸ்லிம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்கள் இன்றைய தினம் கொழும்புக்கு வந்தடைந்துள்ளனர். அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் தாம் அரசுக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகிக்கொள்ளப்போவதாக தெரிவித்து சுயாதீனமாக இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பை விட எதிரணியினரின் பக்கம் பலம் அதிகரித்துள்ளது. இதனால் வரவு செலவு திட்ட சமர்பிக்கப்பட்டால் தேல்வியடையும் நிலை ஏற்படும். இது அரசிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். எனவே சபை நடவடிக்கைகளை அடுத்த மாதம் வரை ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகின்றது.

ஏற்கனவே ஊவா மாகாண சபை குளிர் காரணமாக ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham