'தனித்துவத்தை விட்டு தேசிய ரீதியில் முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும்'

Friday, December 19, 20140 comments


முஸ்லிம் சமூ­கத்தை தனி­மைப்­ப­டுத்தும் தனித்­துவ அர­சி­யலை விட்­டு­விட்டு தேசிய அரசியலில் பங்­கு­பற்­று­வது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

நல்­லாட்­சிக்கான தேசிய முன்­ன­ணியின் இளைஞர் மன்­றத்­தினால் கொழும்பு மரு­தா­னையில் வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற இளை­ஞர்­க­ளுக்­கான தெளிவூட்டும் கூட்­டத்­தி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான்


நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தலைவர் பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான் உரை­யாற்­று­கையில்,

இன்று அர­சி­யலில் 'நல்­லாட்சி' என்ற சொல் அதி­க­மாக பேசப்­படும் சொல்­லாக இருக்­கின்­றது. காலப்­போக்கில் இச்சொல் மறக்­கப்­பட்­டு­வி­டு­மோ என்­கிற அச்சம் எனக்கு ஏற்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே காலத்­துக்கு காலம் அதி­க­மாக பேசு­பொ­ரு­ளா­க­வி­ருந்த ஜன­நா­யகம், சட்டம், நீதி, ஒழுங்கு போன்ற சொற்கள் மறக்­கப்­பட்­டு­விட்­டன. இதன் தொட­ராக நல்­லாட்சி அர்த்­த­மற்­ற­தாய்­போய்­வி­டுமோ என்­கிற அச்­சமே என்னை ஆட்­கொண்­டுள்­ளது.

நாம் எட்டு வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே இந்த நல்­லாட்சி தொடர்பில் கதைக்­கிறோம். அதனை எமது அர­சியல் உபா­ய­மா­க­வல்­லாது செயற்­பா­டாக கொண்­டுள்ளோம்.

முஸ்லிம் தலை­மை­களின் கோசங்கள் வெற்­றுக்­கோ­ச­ங்களாக மாறி­யுள்­ளன. நிலத்­தொ­டர்­பற்ற மாகாணம் சுருங்கி தென்­கி­ழக்கு மாகா­ண­மாக மாறி­யது. பின்னர் கரை­யோர மாவட்­ட­மாக சிறி­தாகி மேல­திக அர­சாங்க அதிபர் கோரிக்கை என்று வந்து நிற்­கி­றது.

மைத்­திரி ஜனா­தி­ப­தி­யானால் நல்­லாட்சி ஏற்­பட்­டு­விடும் என்று இருந்­து­விட முடி­யாது. இதற்­காக நாட்டில் பெரும் மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும். பொது வேட்­பாளர் தீர்வின் ஆரம்பம் மட்­டுமே என  தெரி­வித்தார்.

நஜா முஹம்மத்


நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் செய­லாளர் அஷ்ஷெக் நஜா முஹம்மத் உரை­யாற்­று­கையில்,

தேசிய வேலைத்­திட்­டங்­க­ளி­லி­ருந்து முஸ்லிம் கட்­சிகள் ஒதுங்­கி­யி­ருந்து வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­ன்றன. இந்­நிலை மாற்­றம்பெற வேண்டும். நாட்டில் நல்­லாட்சி உரு­வா­வதில் முஸ்­லிம்­களும் நேர­டி­யான பங்­க­ளிப்பை நல்­க­வேண்டும்.

இன்று முஸ்லிம் சமூ­கத்தின் தலை­வர்­களின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருக்­கின்­றது. மக்கள் தலை­வர்­களை வழி­ந­டத்தும் அள­விற்கு வங்­கு­ரோத்து நிலை­மையில் அவர்கள் இருக்­கின்­றனர்.

முஸ்லிம் சமூகம் சார்ந்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மைத்­தி­ரியை ஆத­ரிப்­ப­த­னூ­டாக எமது பங்­க­ளிப்பை நாம் வழங்­கு­கிறோம். இது சாதா­ரண அர­சியல் முடி­வல்ல. பல மாத முயற்­சியின் தீர்­மா­ன­மாகும்.

பெரும்­பான்மை மக்கள் அர­சியல் ரீதி­யான மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த முன்­வ­ரும்­போது முஸ்லிம் சமூ­கமும் பின்­னிற்­கக்­கூ­டாது.

நாங்கள் இந்­நாட்டில் ஒதுங்கி வாழ முடி­யாது. தனித்­து­வம்­பேசி தனி­மை­ப்பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தில்நாம் தெளி­வாக இருக்­கிறோம்.

இன்­றைய அரசில் நாம் உரி­மை­க­ளுக்­காக பிச்சை கேட்­க­வேண்­டிய நிலை­மைக்கு அர­சி­யல்­வா­திகள் மாற்­ற­ம­டைந்­துள்­ளனர்.

நியா­யத்தின் அடிப்­ப­டையில் உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள அனை­வ­ரி­னது உரி­மை­க­ளுக்­கா­கவும் நாம் குரல்­கொ­டுக்­க­வேண்டும்.

அஸ்மின் அய்யூப்


வட­மா­காண சபை உறுப்­பினர் அஸ்மின் அய்யூப் உரை­யாற்­று­கையில்,

முஸ்லிம் சமூகம் குறு­கிய சிந்­த­னை­யு­டனே இருக்­கின்­றது. இது மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும்.

பொது பல சேனா அமைப்பு அர­சாங்­கத்­துடன் இருப்­ப­த­னாலும் அவர்­களின் முஸ்லிம் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு அரசு  ஆத­ரவு வழங்­கி­ய­மை­யாலும் முஸ்­லிம்கள் ஆட்­சி­யா­ளர்­களை வெறுக்­கின்­றனர்.  இது குற­ுகிய சிந்­த­னை­யாகும். நாம் பரந்­த­ளவில் சிந்­திக்­க­வேண்டும்.

நாடு மாற்­றத்தை நோக்கி போரா­டிக்­கொண்­டி­ருக்­கும்­போது முஸ்லிம் அர­சி­யல்­வாதி எம்.பி. பதவி கேட்டு அடம்பிடித்து அதனை பெற்றுக்கொண்டதையிட்டு வெட்கப்படவேண்டியிருக்கிறது.

மக்கள் அரசிலிருந்து முஸ்லிம் தலைமைகள் வெளியேற வேண்டும் என கூறும்போது தலைமைகள் இது கேள்வி அதிகமிருக்கும் காலமாகையால் இன்னும் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கலாம் என தெரிவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நாம் தகுதியில்லாதவர்களை ஆட்சிபீடமேற்றியிருக்கின்றமையினாலேயே இந்நிலமை ஏற்பட்டுள்ளது என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham