தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் பொறுப்பு உலமாக்களுக்கு உண்டு - உலமா சபை

Friday, December 19, 20140 comments

ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்தல் நடாத்­தப்­ப­ட­வுள்ள நிலையில், தேர்தல் காலங்­களில் முஸ்லிம் சமூகம் கடைப்­பி­டிக்­க­வேண்­டிய ஒழுக்­கங்கள் தொடர்­பாக முஸ்லிம் சமூ­கத்­துக்கு தெளி­வு­களை வழங்­கு­வது உல­மாக்­க­ளது கட­மை­யாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இது காலத்தின் தேவை­, எனவே உல­மாக்கள் தமக்குக் கிடைக்கும் சந்­தர்ப்­பங்­க­ளான குத்­பாக்கள், விஷேட பயான்கள், கலந்­து­ரை­யா­டல்கள் என்­ப­வற்றின் போது சமூ­கத்­திற்கு பின்­வரும் விட­யங்­களை உணர்த்­து­மாறு அன்­பாகக் கேட்­டுக்­கொள்­கிறோம் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்-ஷைக் எம்.எம். அஹ்மத் முபா­றக்­கினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

01. ஜன­நா­யக நாடொன்றில் பல­த­ரப்­பட்ட கட்­சிகள் தேர்­தலில் போட்­டி­யி­டலாம். எவரும் தான் விரும்பும் வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது அவ­ரது உரி­மை­யாகும். நம்­நாட்டு முஸ்­லிம்கள் தமது வாக்­கு­ரி­மையை பய­னுள்ள முறையில் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். அதே­நேரம் முஸ்­லிம்கள் வாக்­க­ளிப்­பதில் அசி­ரத்­தை­யாக நடந்து கொள்ளக் கூடாது.

02. முஸ்­லிம்கள் நாவால், உடல் உறுப்­புக்­களால் வெளி­யாகும் எந்தக் குற்றச் செயல்­க­ளிலும் சம்­பந்­தப்­பட்­டு­வி­டக்­கூ­டாது. வீணான தர்க்கம், சண்டை சச்­ச­ர­வுகள், வன்­செ­யல்கள், வதந்­தி­களை பரப்­புதல் என்­பன முஃமினின் ஈமா­னையே பாதித்­து­விடும்.

03. மறு­உ­லக வாழ்­வையும் நற்­கூ­லி­யையும் எதிர்­பார்த்து நிற்கும் தன் சகோ­தர முஸ்­லிமின் உயிர், பொருள், மானம், மரி­யாதை என்­ப­வற்­றிற்கு உத்­த­ர­வா­த­ம­ளிக்கும் வகை­யிலும் பிற­மத சகோ­த­ரர்­க­ளுக்கு தீங்கு ஏற்­ப­டாத வகை­யிலும் நடந்து கொள்­வது அவ­சி­ய­மாகும்.

04. முஸ்­லிம்­க­ளா­கிய நாம் ஆட்­சியை கொடுப்­ப­வனும் ஆட்­சியை எடுப்­ப­வனும் அல்­லாஹ்வே என்ற நம்­பிக்கை கொண்­ட­வர்கள். எனவே முஸ்­லிம்­க­ளுக்கு பாத­க­மற்ற நல்­லாட்சி ஏற்­பட அல்­லாஹ்­விடம் பிரார்த்­திக்கும் அதே­வேளை அதி­க­மாக நல்­ல­மல்­களில் ஈடு­ப­டு­வதன் மூலமும் பாவங்­களை விட்டு தூர­மா­வதன் மூலமும் அல்­லாஹ்­வு­ட­னான தொடர்பை பலப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

05. தேர்தல் முடிந்த பின்னர் நிதா­ன­மாக நடந்து கொள்­வது கட­மை­யாகும். முஸ்லிம் சமூகம் எப்­போதும் ஒற்­று­மை­யையும் சக­வாழ்­வையும் பேணும் வகையில் முன்­மா­தி­ரி­யாக நடந்து கொள்ள வேண்டும்.

06. பள்­ளி­வா­சல்­களை தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கோ அது சம்­பந்­தப்­பட்ட விட­யங்­க­ளுக்கோ பயன்­ப­டுத்­து­வதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

07. ஏற்­க­னவே அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வெளி­யிட்ட தேர்தல் தொடர்­பான அறிக்­கை­யையும் அதில் உல­மாக்கள், அர­சி­யல்­வா­திகள், பொது­மக்கள் என பல­ருக்கும் கூறப்­பட்­டுள்ள வழி­காட்­டல்­க­ளையும் கவ­னத்தில் கொண்டு சமூ­கத்­திற்கு தெளி­வு­களை வழங்க வேண்டும்.

மேற்­கூ­றப்­பட்ட அறி­வு­றுத்­தல்­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் பொது­மக்­க­ளுக்கு உணர்த்தி,  அவர்­களை வழி­ந­டாத்த வேண்­டு­மென உல­மாக்­களை, குறிப்­பாக  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாக வேண்டிக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham