ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டை பிளவுபடுத்த முயலும்
சக்திகளுடன் இணைந்து கொண்டுள்ளதாக அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அமைச்சர் சுசில்பிரேமஜயந் இந்த குற்றச்சாட்டை
முன்வைத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு என தனியான ஒரு நிர்வாக
அலகொன்றை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்ததன் காரணமாகவே
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன அடிப்படையிலான தனி நிர்வாக அலகொன்றை அரசு
ஏற்றுக்கொள்ளாது,அது
அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறையில் இவ்வாறான தனிநிர்வாக அலகொன்றை முஸ்லிம்களுக்காக
ஏற்படுத்துவது, பிரிவினைக்கு
வழிவகுக்கும், அதன் காரணமாகவே
அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது, தமிழ் தேசிய கூட்டமைப்பும் மைத்திரிபால சிறிசேனவிற்கு
நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவளிக்கலாம், நாட்டை பிரிப்பதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது
இடம்பெறுகின்றது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment