பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வந்துரம்ப பகுதியில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்காக
அமைக்கப்பட்ட தேர்தல் மேடைக்குத் தீவைத்தமை, உடப்பு பகுதியில் இரண்டு
கடைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை, கைதுசெய்யப்பட்ட மூவரை பொலிஸ்
நிலையத்திற்குள் நுழைந்து பலவந்தமாக அழைத்துச் செல்ல முற்பட்டமை போன்ற
சம்பவங்களில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து நிஷாந்த முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்யுமாறு, அண்மையில் பத்தேகம
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 26ம்
திகதி சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் இன்று அவர் நாடு திரும்பியவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டமுத்துஹெட்டிகமவை டிசம்பர் 30ம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment