ஜனாதிபதியிடம் உள்ள பைல்களுக்கு பயப்படும் முஸ்லிம் அமைச்சர்கள் அல்லாஹ்விடம் உள்ள பைலுக்கு பயந்துகொள்ளட்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின்போதே இவ்வாறு கூறினார். அவர்மேலும் கூறுகையில்,
முஸ்லிம்களுக்கு அநியாயங்களை அரங்கேற்றிய அரசாங்கத்தின் பங்காளிகளாக முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஒட்டிக்கொண்டிருப்பதற்கான காரணத்தை மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்கே அரசுடன் இருப்பதாக அரசியல் வாதிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பாதுகாப்பு அரவே இல்லை என்பதை அளுத்கம சம்பவமும் ஏனைய பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் பறைசாற்றுகின்றன.
அமைச்சர்களை பைல்களை வைத்து பயமுறுத்தியே ஜனாதிபதி வைத்துள்ளார் என்பதை அவரே கூறிவிட்டார். இந்நிலையில் முஸ்லிம் எம்.பிகளுக்கும் நிறையே பைல்கள் இருக்கின்றனபோலும் இதனாலேயே அவர்களும் பெட்டிப்பாம்புபோல் அடங்கி கிடக்கின்றனர். ஹுனைஸ் பாறூக் சுத்தமானவர் என்று நிறூபித்து விட்டார். ஏனையவர்கள் சுத்தமானவர்கள் என்றால் நிறூபித்துக்காட்டடும். இல்லையேல் அடுத்த பொதுத்தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment