வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக்கின் வாகனம் மீதும் அவரது சாரதி மற்றும் பாதுகாவலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று பிற்பகல் 4 மணியளவிலே பொறளை கோட்டே வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது.
ஹுனைஸ் எம்.பி.யின் குடும்பத்தினர் அவரது கெப் ரக வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியிடமொன்றுக்கு புறப்பட்டு செல்ல ஆரம்பித்தவேளை அருகில் இருந்த மோட்டார் சைக்கில் ஒன்றின் மூலம் வேண்டுமெற்று மோதவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் குறித்த தாக்குதல்தாரிகள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதோடு சாரதி மற்றும் பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு 'கோ மந்திரிதுமா' என கேட்டுள்ளனர். குறித்த வாகனத்தில் எம்.பி. இருக்கவில்லை. அவர் வீட்டுக்குள் இருந்த நிலையில் அத்துமீறி வீட்டுக்குள் நுளைய முற்பட்டதாகவும் அவரது பாதுகாவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் இடம்பெற்றதையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, முன்னள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, மேல்மாகாண சபை உறுப்பினர்களான, முஜிபுர் ரஹ்மான், பைறூஸ் ஹாஜியார், சட்டத்தரணி ஸுஹைர் உள்ளிட்ட பலர் ஸ்தலத்துக்கு சென்றுள்ளனர்.




Post a Comment