அஷ்ரபின் பாரியார் பேரியல் மைத்திரிக்கு ஆதரவு?
Friday, December 19, 20140 comments
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் அஷ்ரபின் பாரியார் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2000 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மூலம் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட இவர் 2010 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார்.
தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்து பின்னர் 2010 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொண்டார். பின்னர் 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கான உயர்ஸ்தானிகராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். மூன்று வருடத்திற்கு அந்த பதவியிலிருந் விலகி தற்போது அவர் நாடு திரும்பியுள்ளார் இந்நிலையிலேயே அவர் மைத்திரிக்கு ஆ.தரவளிப்பதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment