இளவரசருக்கு பிறந்தநாள் பரிசு ஹெலிக்கொப்டர் – அத்துரலியே ரத்ன தேரர்
Friday, December 19, 20140 comments
அரச குடும்பத்தின் புதல்வரின் பிறந்த தினத்திற்கு ஹெலிக்கொப்டர் பரிசளிக்கப்படுவதாகவும், அவரது காதலிக்கு மூன்று லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கடிகாரம் அன்பளிப்பு செய்யப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்கு மக்கள் வறுமை காரணமாக துயரத்தில் இருக்கும் போது ராஜபக்ச குடும்பத்தினர் தமது சுகபோகங்கள் பற்றி மாத்திரமே சிந்தித்து வருகின்றனர்.
ராஜபக்ச குடும்பத்திரும் அவர்களின் பரிவாரங்களும் நூறு கோடி என்ற கணக்கில் கொள்ளையடிப்பதில்லை.
10 ஆயிரம் கோடி என்ற கணக்கில் கொள்ளையிட்டு வருகின்றனர் எனவும் ரத்ன தேரர் மேலும் கூறியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment