பஷில் ராஜபக்ஷ மீண்டும் ஐ.தே.காவில் இணைவார்: சம்பிக்க

Sunday, December 14, 20140 comments


பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பஷில் ராஜபக்ஷ மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்வார் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு கிழக்கு அமைப்பாளரின் ஏற்பாட்டில் கிருலபணையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின்போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர் அரசிலுள்ள பெரும்பாலானோர் எம்முடன் இணைந்துகொள்வர். அதன்போது சமல் ராஜபக்ஷவும் நாமல் ராஜபக்ஷவும் பஷில் ராஜபக்ஷவும் மட்டுமே எஞ்சுவர். இதில் பஷிலை நம்ப முடியாது ஏனெனில் அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஆளும் தரப்புக்கு சென்றவர். அவர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham