கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு ஆயிரக் கணக்கான வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன் மக்களின் இயல்பு வாழ்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கல்முனை சம்மாந்துறை , திருக்கோவில், லகுகல, பானாமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, மருதமுனை பொத்துவில் போன்ற பிரதேசங்களில் வீடுகள் பல நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
நாவற்குடா, தாளங்குடா, காத்தான்குடி, ஆரையம்பதி, சித்தாண்டி, ஏறாவூர் உள்ளிட்ட பல பகுதிகளும் மற்றும் மட்டக்களப்பு நகரின் மாமாங்கம், சின்ன ஊறணி, சின்ன உப்போடை, திசவீரசிங்கம் சதுக்கம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம புகுந்துள்ளதோடு வீதிகளும் வெளளத்தில் மூழ்கியுள்ளன.
திருகோணமலை மூதூரின் சில பகுதிகளிலும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, பலர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், தொடர்ந்தும் சில இடங்களில் மக்கள் இடம்பெயரக்கூடிய நிலை காணப்படுவதாகவும் பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்னார் தீவுப்பகுதியைச் சேர்ந்த எமிழ் நகர்,சௌத்பார்,சாந்திபுரம் , ஜீவபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் தலைமன்னார் ஸ்ரேசன் கட்டுக்காரன் குடியிறுப்பு,துள்ளுக்குடியிறுப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதீப்படைந்து இடம் பெயர்ந்துள்ளனர். இக்கிராம மக்கள் தற்போது இடம் பெயர்ந்து பாடசாலை,ஆலயம்,பொது மண்டபங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
Post a Comment