மெததும்பர பிரதேசசபை வரவு செலவுத்திட்டம் தோல்வி
Friday, December 5, 20140 comments
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட மெததும்பர பிரதேசசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.
ஒரு மேலதிக வாக்கினால் இந்த வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மெததும்பர பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் 11 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஏழு பேரும் உள்ளனர்.
எனினும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐவர் சமூகமளிக்கவில்லை என எமது செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இன்று சமூகமளித்த ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் அறுவரும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததோடு, ஐ.தே.க உறுப்பினர்கள் ஏழ்வரும் எதிராக வாக்களித்துள்ளனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment