ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனி
மாவட்டக் கோரிக்கையை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன
மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிராகரித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு என தனியானர் ஒர் நிர்வாக மாவட்ட
அலகினை உருவாக்கித் தந்தால், பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயார் என
முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என மைத்திரிபால சிறிசேன
மற்றும் ரணில் விக்மசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று
தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவும் ரணில்
விக்ரமசிங்கவும், முஸ்லிம் காங்கிரஸூடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை
நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கில் தனி நிர்வாக மாவட்டம் அமைக்கும் கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனி மாவட்டக் கோரிக்கையை மைத்திரிபால
Wednesday, December 3, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment