அதாவுல்லா கட்சியும் ஜனாதிபதியை சந்தது; மஹிந்தவுக்கு ஆதரவாம்
Sunday, December 7, 20140 comments
ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப்படும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அறிவித்துள்ளார்.
அமைச்சர் அதாவுல்லா உட்பட அந்த கட்சியின் பிரதிநிதிகள் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கை இரண்டாக பிரிப்பது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பது ஆகியன 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி முன்வைத்த பிரதான கோரிக்கை எனவும் மூன்று வருடங்களில் ஜனாதிபதி தமது கோரிக்கையை நிறைவேற்றியதாகவும் தேசிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.உதுமா லெப்பை, மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் ஆகியோர் கலந்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment