சந்திரிக்கா தொடர்பில் எஸ்.பி.யின் கருத்து கவலையளிக்கிறது - ஸல்மா ஹம்சா

Monday, December 15, 20140 comments


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தொடர்பில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்தானது மிகவும் கவலையளிக்கிறது என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான ஸல்மா ஹம்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தாயும் பெண்ணே தாரமும் பெண்ணே என்பார்கள். பெண்களை தரக்குறைவாக பேசுவது பெண்களை அசிங்கமான வார்த்தைகளை கொண்டு பேசுவது ஒரு ஒழுக்கமில்லாத நாகரீகமற்ற நடவடிக்கையாகும்.

அதிலும் குறிப்பாக இலங்கையில் 11 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்து இந்த நாட்டை வழிநடாத்தி கொடூர யுத்தத்தினால் இந்த நாட்டுக்காக தனது கண்ணையும் இழந்த இலங்கையின் உயர்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு இவ்வாறு கருத்து வெளியிடுவதானது மேலும் வேதனையை ஏற்படுத்துகின்றது.

சந்திரிக்கா அல்ல வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது.

பெண்களின் மீதான வல்லுறவு என்பது உடலினால் மேற்கொள்ளப்படும் வல்லுறவு மாத்திரமல்ல. இவ்வாறான வார்த்தை பிரயோகங்களும் வல்லுறவுக்குள் அடங்கும் என்றே நான் கருதுகின்றேன்.

அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று மனித நேயம் கொண்ட நாகரீகமுள்ள பண்பாடுள்ள யாரும் சந்திரிகா மீதோ அல்லது வேறு எந்த பெண்களின் மீதோ இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளமாட்டார்கள்.

தனது தாய்க்கு அல்லது தனது சகோதரிகளுக்கு அல்லது தனது மனைவிக்கு யாராவது இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை கூறினால் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந் நிலையில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சந்திரிகாவை பற்றி கூறிய மிக மோசமான அந்த வார்த்தைகளை ஊடகங்கள் மூலமாக பார்த்ததையடுத்து மிகவும் வேதனைப்பட்டேன்.

நான் ஒரு பெண் என்ற வகையிலும் பெண்களுக்கான செயற்பாட்டாளர்  என்ற வகையில் அவர் கூறிய அந்த வார்த்தைகளையிட்டு கவலை கொள்வதுடன் இதற்காக எனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அந்த வார்த்தையை பிரயோகித்ததற்காக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சந்திரிகாவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham