ரிசாத்தின் கோரிக்கைகள் ஜனாதிபதியினால் முழுமையாக ஏற்பு

Sunday, December 21, 20140 comments


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளை அரசுடனான உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கட்சியினால் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஆறு கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதற்கும் ஏனைய கோரிக்கைகளை ஏற்றுக் அரசுடனான உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல், இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்கல், சகல சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் சமய, கலாசார உரிமைகளைப் பேணுவதற்கான உத்தரவாதம், வடக்குக் கிழக்கில் படையினராலோ, புலிகளினாலோ ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை மீளளிப்பதற்கான நடவடிக்கை, அரசாங்க தொழில் வாய்ப்பு மற்றும் அரச உயர் பதவிகளில் நியமனம் ஆகியவற்றில் இன விகிதாசாரம் பேணப்படல், மட்டக்களப்பு - பொத்துவில் புகையிரதப் பாதை விஸ்தரிக்கப்படல் ஆகிய பிரதான கோரிக்கைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரச உயர்மட்ட அமைச் சர்களுக்குமிடையில் கடந்த வாரம் இடம் பெற்ற சந்திப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கோரிக்கைகள் விரிவாக ஆராயப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டிருப்பதாக அ. இ. ம. கா. வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக கட்சியின் கோரிக்கைகளுடன், சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்களுடனும் பாதுகாப்புச் செயலாளருடனும் இடம்பெற்ற பல்வேறு கட்டச் சந்திப்புகளின் போது உடன்பாடு கண்ட விடயங்களை இரு தரப்பு ஒப்பந்தத்திலும் உள்வாங்குவதற்கும் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுப்பதற்குமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham