ஊழல் மேசடிகளை அம்பலப்படுத்துவேன் - நவீன் எச்சரிக்கை
Tuesday, December 2, 20140 comments
சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மோசடிகள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் சீனவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாரியளவிலான மோசடிகள் பற்றிய விபரங்களை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நம்ப முடியாத அளவிற்கு மோசடிகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடாத ஒர் தலைவரையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும், அதற்கு மைத்திரிபால சிறிசேன பொருத்தமானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment