எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வை. எல் எஸ் ஹமீட் இதனை தெரிவித்தார்.
ஏ எச் எம் அஸ்வர் விலகிய நிலையில் காணப்பட்ட வெற்றிடத்திற்கு தமது கட்சிக்கு அந்த வெற்றிடத்தை நிறப்புமாக விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது தீர்மானத்தை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கவுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் ஷபீக் ராஜாப்டீன் தெரிவித்துள்ளார்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞானபத்தை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment