ஹக்கீம், ரிஷாட் ஆதரவின்றி வெற்றியீட்டுவோம் - சுசில்
Wednesday, December 24, 20140 comments
ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவின்றியே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. வன்னியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர் பின்னணி கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ரிசாட் பதியூதீன் கடந்த பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பிலேயே போட்டியிட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி மற்றும் தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றியீட்டியதாகவும் தனித்து போட்டியிட்டிருந்தால் வெற்றியீட்டியிருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூன்று பேரை தேர்தலில் நிறுத்திய போதிலும் ஒருவர் மட்டுமே வெற்றியீட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களின் போதும், 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இன்றியே ஆளும் கட்சி வெற்றியீட்டியதாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் அது அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment