பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா பல்டி; மைத்திரிக்கு ஆதரவு
Wednesday, December 24, 20140 comments
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா வெளியேறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் தனியார் முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பதவியினையும் அவர் இராஜினாமாச் செய்யவுள்ளதாக குறித்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
பொதுபலசேனா அமைப்பிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டமைப்பிற்கும் இடையில் தொடர்பிருந்தால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவேன் என பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் பிரதி அமைச்சர் பதவியினை இராஜினாமாச் செய்து விட்டு ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமாகச் செயற்படும் இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிய மத்திய கொழும்பு இணை அமைப்பாளராவார்.
ஏற்கனவே சுதந்திர கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர்களில் ஒருவரான ஹிருணிகா பிரேம சந்திர எதிரணியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment