மூக்குடைந்தார் ஹிஸ்புல்லா! ரிசாத்திடம் சென்றார் சிப்லி!
Monday, December 22, 20140 comments
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் ஹிஸ்புல்லாவை விட்டு விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீனுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்க இன்று முன்வந்திருக்கும் நிலையில் இவர் தன்நிலைப்பாட்டை வெளிப்டுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம்களின் மனோநிலைக்கு மாற்றமான கருத்தைக் கொண்டிருப்பதால், தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரின் நிலைப்பாட்டை ஆதரிக்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும் முஸ்லிம் சமுகத்தின் எதிர்பார்ப்பிற்கு அமைய பொதுவேட்பாளரை ஆதரிக்கும் இத்தருணத்தில் ஹிஸ்புல்லாஹ் தனது முடிவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
Post a Comment