பசிலின் முக்கிய செயலர் மைத்திரி வீட்டில்
Monday, December 22, 20140 comments
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் பசில் ராஜபக்சவின் முக்கிய செயலாளர் ஒருவர் எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் காணக்கூடியதாக இருந்ததாக எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது உறவுகளுடன் ஏற்பட்ட உட்பூசலால் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் குறித்த அமைச்சரின் செயலாளரை எதிர்க்கட்சியின் ஊடக அலுவலகத்திற்கு வருகை தந்ததாக ஊடக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
கட்சித் தாவல்கள் அதிகரிக்கின்றன ஜனாதிபதியின் வீடு மரணவீடு போல் காணப்படுவதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
Post a Comment