அலரி மாளிகையில் ஹரீன்! நான் என்ன முட்டாளா…..
Monday, December 22, 20140 comments
ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஊவா மாகாண சபை எதிர்கட்சி தலைவர் ஹரீன் பெர்னாண்டோ அரசில் இணைந்துகொள்ள ஆயத்தமாகி வருவதாகவும் சற்றுமுன் அலரிமாளிகைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
இது தொடர்பாக ஊவா மாகாண சபை எதிர்கட்சி தலைவர் ஹரீன் பெர்னாண்டோ அவர்களை தொடர்ப்புகொண்டு கேட்டபோது அலறி மாளிகையை பதுள்ளைக்கு மாற்றிவிட்டார்களா என கேட்டார்.தான் ஐக்கிய தேசிய கட்சிக்காகவும் ஊவா மக்களுக்காகவும் பாராளுமன்ற ஆசனத்தை துறந்தவன் முழ்கும் கப்பலில் போய் ஏறுவதற்கு நான் முட்டாள் இல்லை என தெரிவித்தார்.
தற்போது பதுளை நகரில் தற்போது இடம்பெறும் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment