கிழக்கில் ரிஷாத் அணியினருக்கு அமோக வரவேற்பு
Thursday, December 25, 20140 comments
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேனவை ஆதரித்ததையடுத்து இன்று (25) கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்தனர்.
ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் , அமீர் அலி மாகாண சபை உறுப்பினர்களான சுபைர், ஷிப்லி பாறூக் உள்ளிட்டோர் விஜயம் செய்தனர். இதன்போது இவர்களுக்கு பெரு வரவேற்பளிக்கப்பட்டது.
Post a Comment