சிங்கள சமூகத்திடம் மன்னிப்பு கோருகின்றேன்: அஸ்வர்
Friday, December 26, 20140 comments
பெரும்பான்மை சிங்கள சமூகத்திடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஊடக விவகார ஆலோசகருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியல் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சியிலிருந்து எதிர் கட்சியில் இணைந்து கொண்ட அமீர் அலியின் நடவடிக்கை வெட்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய துரோக செயலை அமீர் அலி மற்றும் ரிசாட் பதியுதின் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு விஷயங்களை மேற்கொண்டு சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்து இறுதியில் கட்சி தாவுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
நன்றி மறந்து இவ்வாறு இறுதித் தருணத்தில் கட்சித் தாவுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. முஸ்லிம் சமூகத்தவன் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிங்கள மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.
இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் இவ்வாறான துரோகிகளுக்கு அல்லாஹ் தண்டனை விதிப்பார்.
வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளாது கட்சி தாவியிருக்க வேண்டுமென அஸ்வர் தெரிவித்துள்ளார்.
அஸ்வரின் தேசிய பட்டியல் ஆசனமே அமீர் அலிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment