முஸ்லிம் அரசியல்வாதிகளின் வெற்றிடத்தை நிறப்பவே சல்மான் கான்: ரணில்
Wednesday, December 31, 20140 comments
அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் வெற்றிடத்தை நிறப்பவே இந்தியாவிலிருந்து சல்மான் கானை கொண்டுவந்ததாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று காலை கொழும்பு விகாரமாகதேவி பூங்காவில் நடைபெற்ற மகளிர் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், சல்மான் கான் மூலம் முஸ்லிம் அரசியல் சங்கமொன்றை உருவாக்க ஜனாதிபதி முயற்சிப்பதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநயக்க தலைமையில் இந்த மகளிர் மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க கருஜயசூரிய, திருமதி சானாஸ் ரவூப் ஹக்கீம், அனோமா பொன்சேகா, திருமதி கபீர் ஹாசீம், பாத்திமா ரவி கருநாயக்க, தலதா அத்துக்கோரள, பெரோசா முசம்மில், ஹிருணிக்கா, மகளிர் பாடகர், நடிகர்கள், இயக்குனர் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment