மஹிந்த ராஜபக்ஷ முன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்!

Monday, December 8, 20140 comments


2015 ஜனவரி 8ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

காலை 10.30 அளவில் ராஜகிரிய தேர்தல்கள் செயலகத்திற்குச் சென்ற ஜனாதிபதி ஐமசுமு பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு தடவை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

இலங்கையில் ஒருவர் இரண்டு தடவையே ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற சட்டம் 18ம் திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டு இரண்டு முறைக்கு மேலும் பதவியில் இருக்க முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

அதன் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham