'முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு'

Sunday, December 14, 20140 comments


ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு ஜனாதிபதிக்கே. ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த மூன்று பேர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். ஒருவர் திரும்பி வந்தார்.

ஜே.வி.பி ஓரமாக இருந்து ஆதரவு வழங்கி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவு எடுக்கவில்லை.

இதனால், இம்முறையும் எதிர்க்கட்சிகள் 25 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham