பாப்பரசர் முதலாம் பிரான்சிசின் இலங்கை வருகை மற்றும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி எட்டம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை
முன்னிட்டு அனைத்து அரசாங்கப் பாடசாலைகளையும் ஜனவரி 7ம் திகதி முதல் 9ம்
திகதி வரை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாப்பரசர் வருகையை முன்னிட்டு கொழும்பிலுள்ள 43 பாடசாலைகள் ஜனவரி 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை மூடப்படவுள்ளன.
மேலும் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (05) இவ்வருடம் மூன்றாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவற்றில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள்
திருத்தும் பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 83 பாடசாலைகளும், ஜனாதிபதித்
தேர்தல் வாக்கெண்ணும் பணிகளுக்காக மத்திய நிலையமாக தெரிவு செய்யப்பட்ட
பாடசாலைகளும் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் முதலாம் தவணைக்காக ஜனவரி 05ம் திகதி
மீளத் திறக்கப்படவுள்ளன.
ஜனவரியில் பாடசாலைகளுக்கு பூட்டு
Wednesday, December 3, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment