20 இலட்சம் வாக்குகளால் மைத்திரி வெற்றி பெறுவார் - அசாத் அலி
Friday, December 26, 20140 comments
வடமாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை பலாத்காரமாக கைப்பற்றிய மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பிய ஜனநாயக ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் தங்களுடைய மத அனுஸ்டானங்களை சுதந்திரமான முறையில் மேற்கொள்ள முடியாமல் போனதும் இந்த ஆட்சியில் தான் என்றும் குற்றம் சாட்டினார்.
மஹிந்த ராஜபக் ஷவின் இந்த அரசாங்கம் தான் எங்கோ இருந்த ஞானசார தேரரை இந்த நாட்டு அழைத்து வந்து சிங்கள - தமிழ், சிங்கள - முஸ்லிம், சிங்கள - கிறிஸ்துவ மக்களுக்கிடையில் இனக் குரோதத்தை ஏற்படுத்தி மதஸ்தலங்களுக்கு தாக்குதலை மேற்கொண்டது.
வடக்கில் தமிழ் மக்களின் 66 ஆயிரம் ஏக்கர் காணியையும் முஸ்லிம் மக்களின் 33 ஆயிரம் ஏக்கர் காணியையும் கைப்பற்றிய மஹிந்த ராஜபக் ஷவுக்கு அந்த மக்கள் ஒரு போதும் வாக்களிக்கப் போவதில்லை.
எனவே நீதி நேர்மையான ஒரு தேர்தல் நடைபெறுமானால் நிச்சயமாக 20 இலட்சம் வாக்குகளால் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்றார்.
Post a Comment