கலவரமொன்றை ஏற்படுத்தி தேர்தலை தடுக்க அரசாங்கம் சதித்திட்டம் - விக்கிரமபாகு

Friday, December 26, 20140 comments


நாட்டில் கலவரம் ஒன்றை ஏற்படுத்தி அதன் காரணமாக ஏற்படக் கூடிய அச்ச நிலையை காட்டி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்த விடாமல் செய்வதற்கே அரசாங்கம் திட்டம் தீட்டுவதாக கூறிய நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன நீதி நேர்மையான தேர்தல் ஒன்று நடைபெற்றால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.


மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நீதி மற்றும் அரசியலமைப்பை மீறி செயற்படுகின்றது. அத்துடன் மக்களைச் அச்சுறுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி செயற்படுவதுடன் தங்களுடைய இந்த செயற்பாட்டுக்கு இன மத வாத அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் இப்படியான மோசமான செயற்பாடுகளால் மக்கள் இன்று பொது எதிரணியுடன் அணி திரண்டுள்ளனர். அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் எம்முடன் இணைந்துள்ளனர். இதன் காரணமாக அரசாங்கம் பாராளுமன்றில் தனது மூன்றில் இரண்டு பெரும் பான்மையை இழந்துள்ளது.


எனவே நாட்டில் கலவரமொன்றை ஏற்படுத்தி அதன் காரணமாக ஏற்படக்கூடிய அச்ச நிலையை காட்டி ஜனாதிபதி தேர்தலை நடத்த விடாமல் செல்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. நீதி நேர்மையான தேர்தலொன்று நடைபெறுமாயின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham