My3 வரலாறு காணாத தோல்வியடையப் போகிறார்: அதாவுல்லாஹ்
Sunday, November 23, 20141comments
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வரலாறு காணாத தோல்வியடையப்போகிறார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ தெரிவித்தார்.
அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அரங்கில் நேற்று சனிக்கிழமை (22) இடம்மெற்ற நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்தர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆசியாவின் ஆச்சிரியம் மிக்க நாயகனாக திகழ்கின்றார். அவருடன் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அதிகூடிய வாக்குகளை பெற்று மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு மக்கள் ஆணை வழங்கிவிட்டார்கள்.
அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளைக் கண்டுள்ளதோடு, எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைத்துள்ளார். அவரை நாம் மறக்கக்கூடாது.
மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் எங்களது வாழ்க்கைத் தரம் உயர்வடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரும் வெளிநாட்டு சக்திகளும் கபட நாடகம் ஆடுகின்றன என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

+ comments + 1 comments
ஒட்டுண்ணி அரசியல் பிழைப்பு நடத்தாமல் முடிந்தால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்டுங்கள் பார்க்கலாம் (தீர்மானம் எடுப்பது நீங்கள் அல்ல மக்கள் ஆகிய நாங்களே )
Post a Comment